திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்தநாள் முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் துவி மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு அவரது தொண்டர்கள் வாழ்த்து மடல் மற்றும் வீடியோ அனுப்பினர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, 1-03-2018ல் 66வது பிறந்தநாள் காணும் கழகத்தின் செயல் தலைவர் எங்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 100 ஆண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன். தமிழக மக்களுக்காக நாளும் உழைக்கும் தளபதி தமிழக மக்களை  விரைவில் ஆள எனது வாழ்த்துகள். 



தனது பிறந்தநாள் முன்னிட்டு கோபாலபுரம் இல்லம் வரும் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடமும், தாயார் தயாளு அம்மாளிடமும் ஆசி பெறுகிறார். அங்கிருந்து, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார்.


மேலும், அவர் தனது பிறந்தநாளில் தொண்டர்களுக்கு கோரிக்கைகயாக தனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக புத்தகங்கள் அளித்தால் நல்லது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே, அவரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு புத்தகங்களை பரிசாக அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.