தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:-


முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும், ஆண்டுதோறும் அரசு மேல்நிலைப்பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது சில நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்படாத பள்ளிகளை ஆய்வுசெய்ய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


ஆய்வின் போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும். ஒரே பள்ளியில் நாள் முழுவதும் இருந்து ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க முயல வேண்டும்.


பள்ளி வளாகத்தில் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆபத்தான நிலையில் உள்ளவற்றை சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, அரசின் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களைச் சென்றடைந்தனவா என்று ஆய்வுசெய்ய வேண்டும்.


செய்முறை வகுப்புகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பதிவேடுகளும் சரியாக பேணப்படுகின்றவா என்று பார்வையிட வேண்டும். ஆண்டு ஆய்வு குறித்த விவரங்களை மாதம்தோறும் இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். 


என்று பல்வேறு அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளன.