என்ன நடக்கிறது தமிழ்நாட்டில். தன் அடிப்படை உரிமைக்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்காகவும் போராடியவர்கள் உயிரிழப்பதா? என சிம்பு ஆவேசம்!. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.


நேற்று முன்தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர் கூறியதாவது...! 


``பிரச்னைகள், போராட்டங்கள் தற்போது உயிரிழப்பு. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில். தன் அடிப்படை உரிமைக்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்காகவும் போராடியவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் போராடியது கடைசியில் இறந்து போகவா? தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நமக்கு மாற்றம் தேவை. இந்த அரசை நீக்க வேண்டும். 


என்னுடைய நோக்கம் தீர்வை நோக்கி மட்டுமே உள்ளது. மற்றவை பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இன்று ஆங்கிலத்தில் பேசுவதுக்கான காரணம் இந்தப் பிரச்னையின் பின்னால் இருப்பவர்களுக்கு இதன் நிலைமை புரிய வேண்டும் என்பதுக்காக தான். மிகப் பெரிய சம்பவம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


ஆனால், அது பற்றிய முழுமையான எந்த விவரத்தையும் அரசு தர மறுக்கிறது. தமிழகத்தில் எது நடந்தாலும் இதே நிலையே நீடிக்கிறது.” என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.