மக்களின் வலிமையை எதிர்க்க எந்த அரசுக்கும் பலம் இல்லை -கமல்
மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கபட்டுள்ளதாக தமிழக உள்துறை அறிவித்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள ட்விட்டரில்....!
தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை! என அவர் தெரிவித்துள்ளார்.