SPB மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது: கண்ணீர் மல்க பாரதிராஜா!!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 50 ஆண்டு கால நண்பர், அற்புதமான மனிதர் என இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் மல்க பேட்டி..!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 50 ஆண்டு கால நண்பர், அற்புதமான மனிதர் என இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் மல்க பேட்டி..!
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் (SP Balasubrahmanyam) உடல்நலம் குறித்த செய்திகளுக்காக காத்திருக்கும் வேளையில், மூத்த இயக்குனர் பாரதிராஜா, தனது நெருங்கிய நண்பர் எஸ்.பி.பி. குறித்து கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
ஆகஸ்ட் 5 முதல் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா இன்று மருத்துவமனைக்கு வந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... “சில சூழ்நிலைகளில், வார்த்தைகள் வராது. நான் உணர்ச்சிவசப்படும்போது, என்னால் பேச முடியாது. இந்த துக்கத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் ஜெபித்தோம், அவர் திரும்பி வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது இருக்கக்கூடாது. மேலேயும் அதற்கு அப்பாலும் ஒரு சக்தி இருக்கிறது… நாம் இயற்கையின் முன் ஒன்றும் இல்லை. எனக்கு இன்னும் ஒரு சிறிய நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு அற்புதமான கலைஞர் மற்றும் மனிதர். நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம், ”என்று அவர் கூறுகையில் அவரது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ALSO READ | என்ன ஆச்சு SPB-க்கு... மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர்!!
பிரபல பின்னணி பாடகர் SP.பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் SPB-யின் மகன் சரண் அவர்கள் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில்SPB-யின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதனால் அதிகப்பட்ச உயிர்காக்கும் கருவிகளைக் கொண்டு, மருத்துவ நிபுணர்குழு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், SPB-யின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அவர் சிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று நிலவரம் குறித்து கேட்டறிகிறார். இதனைத்தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, SPB-யின் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதோடு பாடகர் SPB சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.