ஜெ. வீடியோவை ஊடகங்களில் ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்: தேர்தல் ஆணையம்
அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ ஆர்.கே. நகர் தேர்தலை பாதிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்புவரை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ ஆர்.கே. நகர் தேர்தலை பாதிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்புவரை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் இன்று வெளியாட்டு உள்ளார்.
கட்டிலில் சாய்ந்த படி ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு பழச்சாறு அருந்தும் காட்சி வீடியோவை வெற்றிவேல், வெளியாட்டு இருந்தார்.
கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5 ம் தேதி காலமானார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. இந்த விசாரணை கமிஷன் முன்பு டாக்டர்கள் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
இன்று சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்புவரை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>
இதனிடையே தேர்தல் விதிகளை மீறி ஜெயலலிதா குறித்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ ஆர்.கே. நகர் தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்புவரை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.