சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கி முதலமைச்சர் கடந்த இரண்டு மாத காலமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் புயலை எதிர்நோக்கி நேற்று முதலமைச்சர் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பேசி அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், அரசு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மண்டல அலுவலர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை களத்திற்கு செல்ல கூறி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், எந்த பகுதியில் புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் என எண்ணப்படுகிறதோ, அந்த பகுதியில் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அங்கேயே தங்கி பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் - மக்களே உஷார்


புயலால் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகளவில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மொத்தம் 435 பேர் தயார் நிலையில் உள்ளதோடு, மின்சார கம்மங்கள் மின்சார வயர்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், மரங்கள் உடைந்து விழும் வாய்ப்பு இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மழையால் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளது என்றும் 420 குடிசைகள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். சென்னையில் மட்டும் 162 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரை ஓரமாக உள்ள மாவட்டங்களில் 121 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 4 ஆயிரம் பள்ளிகள், திருமண மண்டபங்களை தயாராக வைத்துள்ளதாகவும், 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்கும் அளவிற்கு நிவாரண மையங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ