லேட்டா வந்த சன்னா மசாலாவும்... தாபாவை அடித்து நொறுக்கிய 6 பேரும்
பட்டப்பகலில் உணவு அருந்த வந்த வாலிபர்கள் தாபாவை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த குளிதிகை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, வழக்கறிஞர் முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமான இடத்தை, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் வாடகைக்கு எடுத்து சில ஆண்டுகளாக தாபாவை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் தாபாவிற்கு 3 இருசக்கர வாகனத்தில் 6 பேர் வந்துள்ளனர். இதில் தாபா விற்குள் சென்ற 4 நபர்கள் சன்னா மசாலா மற்றும் ரொட்டி ஆகியவற்றை ஆர்டர் செய்தனர். ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே உணவக ஊழியர்களிடம் அவர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இவர்கள் முதலில் சிசிடிவி கேமிராவை உடைத்துள்ளனர். பின்னர் தாபாவில் கேஷியராக பணியாற்றி வந்த ஷேக் முஹம்மத் (வயது 55) தாபாவை நடத்தி வரும் உரிமையாளரின் தந்தை மற்றும் பணியாளர்கள் முஹம்மத் சித்தாரே (வயது 40) ஷாகீர்அலி (வயது 39) ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர் (Goon Attack).
ALSO READ | கோவையில் இறைச்சி விற்ற கடைக்கு 6ஆயிரம் அபராதம்! 65 கிலோ இறைச்சி பறிமுதல்!
மேலும் தாபாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகள், மேசைகள் , மற்றும் உணவு பொருட்களையும் உடைத்து உள்ளனர்.
அதனை தொடர்ந்து தாங்கள் வந்த இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முகமது யூனுஸ் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் (TN Police) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் உணவு அருந்த வந்த வாலிபர்கள் தாபாவை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி, மாமியார் கைது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR