திருச்சியில் (Trichy)  அமைந்துள்ள "கன்டோன்மன்ட் அய்யப்பன் கோயிலில் பெண்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு தற்பொழுது விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

.இதே போன்று தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் (Kerala Sabari Mazhai)  கோயிலில் ஒரு பிரச்சினை வந்தது.பெண்கள் கோவிலுக்கு வரக்கூடாது என அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதற்கு ஒரு சிலர் இந்து மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறிய காரணம் என்னவென்றால் ஆண்கள் நாங்கள் விரதம் மேற்கொண்டு எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி சில நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளோடு மாலை போட்டு சபரிமலைக்கு வரும்போது எதிரே ஒரு பெண்ணும் வந்தால் எங்களின் பிரம்மச்சாரியம் கலைந்து விடும் என்று "பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாததற்கான காரணத்தை அடுக்கடுக்காக கூறினர்.


ALSO READ : காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை!


இவை தவிர பெண்களுக்கு "மாதவிடாய் பிரச்சினை வேறு உள்ளதால் கோவிலுக்கு வந்தால் தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறினர்.பின்பு இந்த தடைகளையெல்லாம் மீறி கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் (Supreme Court) ஒரு தீர்ப்பளித்தது. அதில் எந்தவொரு வயது வேறுபாடும் இன்றி அனைத்து வயதினைச் சேர்ந்த பெண்களும் கோவிலுக்குச் செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.


"இதற்கு கேரள அரசும் "அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும் (Pinarayi Vijayan) பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதற்கு தாங்கள் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கும் ஒரு சில கேரளாவில் உள்ள "இந்து அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் "தமிழகத்திலும் திருச்சியில் உள்ள கன்டோன்மன்ட் அய்யப்பன் கோயிலில் பெண்கள் அணியக் கூடிய ஆடைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர கோயிலுக்கு வரும் பெண்கள் கட்டாயம் துப்பட்டா அணிந்திருக்க வேண்டுமென்றும் லெகின்ஸ் (Legins) போன்ற ஆடைகள் கட்டாயம் அணிய கூடாது என்ற கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பால் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை இது ஏற்படுத்தியிருக்கிறது‌.


"கோயில் நிர்வாகம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.! 


ALSO READ : நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR