அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் மாணவர் சேர்க்கை!
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஏப்ரல் 1 ம் தேதி முதல் தமிழக அரசு பள்ளிகளில் எல்;கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கையை துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளை போல் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். சான்றிதழ் இல்லாவிட்டாலும் மாணவர்களை எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்கவும் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூகே.ஜி சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் 11ம் வகுப்புக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி சேர்க்கை நடத்தலாம் என்றும், 10 வகுப்பு மதிப்பெண் வெளியான பிறகு, அதற்கேற்ப 11 ஆம் வகுப்பு பாடப்பிரிவுகள் ஒதுக்கிக்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.