திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனமான  basis cloud solutions  நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தை சுற்றி பார்க்கின்றனர். அது மட்டும் இன்றி ஐடி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.


 தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணிக்கும் பொழுது புதுவித அனுபவமாக இருந்தது முதலில் பயத்துடனும் அதன் பிறகு உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.


https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/AIRPLANE-5.jpg


அது மட்டும் இன்றி காது கேளாதோர் வாய் பேசாதோர் ஐடி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பணிபுரியவும் முடியும் தனியார் ஐடி நிறுவனம் அந்த கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.


இந்த குறித்த பேராசிரியர் தெரிவித்த பொழுது இதுபோன்று மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெருகும் எனவும் சாதாரணமாக ஆங்கில வழியில் கல்வி கற்று ஐடி துறையில் பணிபுரியும் மாணவர்களே சிரமப்படும் நிலையில் ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொண்டு ஐ டி துறையில் பணிபுரிந்து அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும் அளவிற்கு மாணவர்கள் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.


மேலும் படிக்க | சீமான், பாஜக-வின் கொள்கை பரப்பு செயலாளரா? - திருமாவளவன் கேள்வி!


மேலும் படிக்க | வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தவர் முக ஸ்டாலின் - அன்புமணி பரபரப்பு பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ