இனி பேருந்து படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் இனி பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்குவதை சாகசச் செயலாக செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்களும் இந்த சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் இதுபோல் பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்கள் கால் இடறி கீழே விழுந்து காயமுற்றனர்.
சென்னையில் பள்ளி மாணவிகள் படிக்கட்டில் பயனித்து அதனை வீடியோ பதிவு செய்து இனையத்தில் பதிவிட்டு வைரல் ஆகினர்.
இவ்வாறு இளம் வயது மாணவ மாணவிகளின் அட்டூழியத்தை ஒடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தாமரை மேலே நீர்த்துளி போல்... இளையராஜா மீது ஏன் வரம்பு மீறிய தாக்குதல்?
இதன் ஒரு பகுதியாக பேருந்து வழித்தடங்களில் போலீஸார் சோதனை நடத்தி, படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து எச்சரித்து வருகின்றனர்.
ஆனாலும் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பது குறையவில்லை. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சில நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளார்.
அந்த அறிவுறுத்தலின் படியும், சென்னை முழுவதும் நேற்று மாநகர பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்களையும், 43 கல்லூரி மாணவர்களையும் போக்குவரத்து போலீஸார் பிடித்தனர்.
அவர்களை பேருந்திலிருந்து கீழே இறங்கச் செய்து, அந்த மாணவர்களின் பெயர் மற்றும் முழு முகவரியை பெற்றனர். பின்னர் அவர்களின் பள்ளி, கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மாணவர்களுக்கு போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி நேரத்தில் ஒரு வழிப்பாதையில் பயணம் செய்தவர்கள் மீதும், ஆட்டோக்களில் அதிமாக மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஓட்டுநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் பின்னர், நேற்று மட்டும் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து காவல் அதிகாரிகள், இனிவரும் காலங்களில் படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குகள் பதியப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR