இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது, ஆபத்தான இடத்தில் செல்ஃபி எடுப்பது என அடுக்கிக்கொண்டு போகலாம். சோசியல் மீடியாவில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு வாலிபர்கள் ஆபத்தை உணராமல் பைக் சாகசம் செய்கின்றனர். இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் பிரகாஷ் என்ற வாலிபர் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோ சமூக வலைதாளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் படுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிய நபர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படுமா ? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுந்துள்ளது.


மேலும் படிக்க | பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!


வித்தியாசமான சிகை அலங்காரம், மிகவும் வித்தியாசமான நடை, உடை, பாவனை ஆகியவை தான் புள்ளிங்கோ எனப்படும் இந்த இளைஞர்களின் ஸ்டைல். இவர்களுக்கே உரிய ஸ்டைல் கொண்டவர்கள்  ‘புள்ளிங்கோ’ என அழைக்கப்படுகின்றனர்.


தமிழ்நாட்டில், வடசென்னை பகுதிகளில் தான் இவங்கள நிறைய பார்க்கலாம் என்ற இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது தமிழ்நாடு முழுவதிலும் இவர்களை பார்க்கலாம். ஒரு வட்டாரத்திலிருந்து கிளம்பிய ஸ்டைல், வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பிரபலமாகி இன்று ஒரு ‘ஸ்டைல் கலாசாரமாகவே’ மாறிவிட்டது. 


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ