வீட்டு உபயோகத்திற்காக இல்லம் தோறும் விநியோகிக்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல்எரிவாயு சிலிண்டரின் விலை ₹2 உயர்வு கண்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படும். சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், மாதத்தின் முதல்நாளையடுத்து இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.  


இது குறித்து இந்தியன் ஓயில் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் 94 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 


சென்னையில் இதன் விலை 481.34-ல் இருந்து தற்போது 483.49-ஆக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியின் வரி தாக்கமே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 


இதே போன்று மானியம் இல்லாத சிலிண்டரின் விலையும் 44 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. சென்னையில் இதன் விலை 673.00-ல் இருந்து 717.00-ஆக அதிகரித்துள்ளது.  அதே வேலையில் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19kg சிலிண்டரின் விலை 1,267.50 ரூபாயில் இருந்து 1336.00-ஆக அதிகரித்துள்ளது.