பெருமை கொள்ளும் தருணம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது
தமிழ் மொழியில் உச்சநீதிமன்றத்தால் பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் பாராட்டு...!!
புதுடெல்லி: தமிழ் மொழியில் உச்சநீதிமன்றத்தால் பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்கு தான் தமிழ் மொழியில் பதிவேற்றம் செய்து உச்சநீதிமன்றம் வெளியிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது. அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்ற தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன. மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பதிவேற்றத்தில் செம்மொழியான தமிழ் மொழி இடம் பெறாததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தற்போது அதிகமான வழக்குகள் வரும் மொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். அடுத்த பட்டயலில் மற்ற மொழிகளையும் சேர்க்கப்படும். அதில் தமிழ் மொழி இடம் பெரும் என உச்சநீதிமன்றம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்தவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளில் தமிழ் இடம் பெறவில்லை. இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது.
இதனையடுத்து, இன்று 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விபரங்கள் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 98 மற்றும் 99 இடங்களில் இருந்த இரண்டு தமிழக வழக்கின் தீர்ப்பு, தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
முதலில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்கு தான் தமிழ் மொழியில் உச்சநீதிமன்றத்தால் பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து நீலகிரியை சேர்ந்த ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேரின் சொத்துக்கள் தொடர்பாக அவரது வாரிகள் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளது.