தேர்தல் பரப்புரையில், சர்ச்சையாக ஏதாவது பேசி மாட்டிக் கொள்வது திமுகவிற்கு வழக்கமாகி விட்டது. அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் என கூறப்படுபவர்கள், முகம் சுளிக்கும் வகையில் அருவெருக்கத்தக்க வகையில் பேசி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் அவரது தாய்க்கு எதிராக கீழ்தரமான வகையில் வகையில் ஆ. ராஜா பேசிய வீடியோ வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது குறித்து அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.


இது தொடர்பான நடவடிக்கையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆ. ராசா அடுத்த 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. 


தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களும், நேற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 


இந்நிலையில், இன்று, பிரச்சாரத்தில் பேசிய, உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெய்ட்லியையும்,சுஷ்மா சுவராஜ்ஜையும் பிரதமர் மோடி துன்புறுத்தி கொன்று விட்டார் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி பிரதமர் மோடியின் டார்ச்சரால் இறந்தார் என்று இழிவுபடுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ள நிலையில், எனது அரசியலுக்காக என் தாயை இழுக்க வேண்டாம்  என சுஷ்மா ஸ்வராஜின் மகள்  உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார் 


ALSO READ | தமிழகத்தின் தாய்மார்கள் திமுகவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் : அமித் ஷா
 
பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் இறப்பைக் கொச்சைப்படுத்தி பேசியதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்து மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ், 
"என் அம்மாவின் நினைவுகளை உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் கூறியது அனைத்தும் பொய்! பிரதமர் நரேந்திர மோடி என் அம்மா மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான கால கட்டங்களில் பிரதமரும் கட்சியும் தான் எங்களுக்குத் தோள் கொடுத்தார்கள். உங்களது பேச்சு எங்களை வேதனைப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.



மற்றவர்களின் இறப்பில் அரசியல் செய்வது நாகரீகமான செயலா என பல தரப்பிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. 


ALSO READ | Watch: மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக தரிசனம் 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR