தைவான் நாட்டு காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம்!
தைவான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம் நடத்த சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்த்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் வெளிநாட்டு பெண் அல்லது ஆண், தமிழ் ஆண் அல்லது பெண்ணை மணப்பது குறித்த செய்திகளை அவ்வப்போது கேட்டிருபோம், முன்பெல்லாம் அதிகமாகவே இருந்து. ஆனால் இப்போது மிகவும் சகஜமாக ஆகி விட்டது. முன்பெல்லாம், அதுபோன்று நடக்கும் திருமணங்களை, ஊரே திரண்டு வந்து வியந்து வேடிக்கைப் பார்க்கும். ஆனால், தற்போது இம்மாதிரியான காதல் திருமணங்கள் இயல்பாகவே ஆகி விட்டன என்பதால் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், இப்போது வெளிநாட்டு காதல் ஜோடிகள், இந்தியா வந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சீர்காழியில் நடந்துள்ளது. இதம் மூலம் வெளிநாட்டினர், இந்து கலாச்சாரம், பண்பாட்டை விரும்பி தங்கள் துணைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இந்து முறைப்படு திருமணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இவ் சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், மேலும் இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் மிக்க காரைமேடு சித்தர்பீடத்தில் இன்று தைவான் நாட்டை சேர்ந்த யோங் ச்சென் என்ற ஆராய்ச்சியாளரும், ருச்சென் ஆசிரியர் இருவரும் இன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமண செய்து கொண்டனர். தொடர்ந்து இந்தியாவில் இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பியுள்ளனர். அதனை அடுத்து தமிழ்நாடு வந்துள்ள இருவரும் தமிழ் முறைப்படி நாடி செல்வ முத்துக்குமரன், நாடி செந்தமிழ் செல்வன், ஆகியோர் ஏற்பாட்டில் ஒளிலாயத்தில் இன்று அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் படிக்க | $500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?
தைவான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம் நடத்த சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்த்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ