அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள காலா திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி  தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 


இந்த மனு நேற்று நீதிபதி ஜி. ரமேஷ் மற்றும் நீதிபதி எம்.தண்டபாணி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, தேவராஜன் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர். 


இதையடுத்து, விதிமீறலில் ஈடுபடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் அதிகமாக இருப்பதாகவும், சில நேரங்களில் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 


மேலும், இந்த வழக்கு விசாரணை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது!