ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாநில அமைச்சர் டி.ஜெயக்குமார் பரிசளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டு இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.


ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.


இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாநில அமைச்சர் டி.ஜெயக்குமார் பரிசளித்தார். 


 



 


இதனிடையே சென்னை மாவட்டம் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி விருகம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று நடக்கிறது. பகல் 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வி.சரோஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.