Youtuber Irfan Car Accident: சமூக வலைதளங்களில், பல உணவுகளை ரிவ்யூ செய்யும் யூ-ட்யூப் சேனல்கள் இருந்தாலும், சில சேனல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அந்த வகையில், யூ-ட்யூபில் 'இஃப்ரான் வியூஸ்' என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்பவர் ஒரு சேனலை நடத்தி வருகிறார். அவர் பல பிரபலங்களையும் தொடர்ந்து பேட்டி கண்டு வருகிறார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

36 லட்சம் பாலோயர்ஸ்


சமூக வலைத்தளத்தில் மிகப் பிரபலமான யூ-ட்யூப் சேனலாக இந்த சேனல் இருந்து வருகிறது. உணவு குறித்த வீடியோக்கள் போடுவதால், இவருக்கு அனைத்து வயதிலும், அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர் யூடியூபில் வைத்திருக்கும் சேனலுக்கு, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் தற்போது உள்னர்.


சமீபத்தில் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது, அதில் பல நடிகர் கவின், யூ-ட்யூபர்கள் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும், அவரது திருமணத்திற்கு நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்ததும் நினைவுக்கூரத்தக்கது. 


ஆளுநருடன் சந்திப்பு 


இந்த நிலையில் தனது மனைவியுடனும் வெளியே செல்லும், வீடியோக்களிலும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார், இர்ஃபான். மேலும், திருமணம் முடிந்த பின்னர் தனது குடும்பத்தினருடன் சென்று ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்திருந்தார். அந்த அளவிற்கு அவர் இணைய உலகின் பிரபலமாக அறியப்படுகிறார்.  zeenews.india.com/tamil/videos/governor-rn-ravi-hosts-tea-party-for-youtuber-irfans-family-445024


மேலும் படிக்க | ஐடி ரெய்டு அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது ஏன்...? - செந்தில் பாலாஜி கேள்வி


நேற்றிரவு விபத்து 


இந்த நிலையில் தென் மாவட்டத்திலிருந்து முகமது இர்ஃபான், தனது பென்ஸ் காரில் சென்னை நோக்கி நேற்று (மே 25) இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மீது அவரின் பென்ஸ் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். 


பென்ஸ் கார் பறிமுதல் 


இந்த நிலையில் இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இர்ஃபானின் பென்ஸ் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி காட்டாங்குளத்தூர், முல்லை நகர் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பத்மாவதி என தெரியவந்தது.
 
ஓட்டியது டிரைவர்


இவர் சென்னை பொத்தேரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. வாகனத்தை இர்பானின் ஓட்டுநர் அசாருதீன் என் என்பவர் ஓட்டி வந்ததாகவும், அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் படிக்க | முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ