கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் கோவா-வில் சிக்கித் தவிக்கும் 200-க்கும் மேற்பட்ட தமிழக மீன்பிடி கூலித் தொழிலாளிகளை கோவா ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீன்பிடி கூலித் தொழிலாளர்கள் கோவாவில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி அவர்கள் கோவா அரசிடன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இதனையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று கோவா ஆட்சியர் மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினர் கொதம சிகாமணி தனது முகப்புத்தகத்தின் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார்.



கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரும்பராம்பட்டு, வடமாமாந்தூர், பொரசப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, செரலூர் கூட்டு ரோடு, திருவரங்கம், கொள்ளியூர், ஓடியந்தல் ஆகிய கிராமங்களிலிருந்து கோவா , பனாஜி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாலிம் ஜெட்டி என்ற இடத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீன்பிடி கூலித் தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். 


கோவாவில் சிக்கித்தவிக்கும் மீனவர்களுக்கு உதவ வேண்டும் எனவும், அவர்கள் அங்கு இருக்கும் வரை அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கௌதம் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கோவாவில் தவிக்கும் தமிழர்களை கோவா ஆட்சியர் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.