தமிழுக்கு கிட்டிய வெற்றி! அஞ்சல் பண விடை படிவம் தமிழிழும்! - எம்.பி
தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது நிரூபணமாகிவிட்டது! இனி அஞ்சலக படிவங்கள் அனைத்தும் தமிழிலும் கிடைக்கும்.... எனது கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சகமும், அஞ்சல் பொது மேலாளரும் பதில்.நடவடிக்கைக்கு நன்றி.
அஞ்சல்துறை சேமிப்புக் கணக்குகளில் பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவை தமிழிலும் இருந்தன. ஆனால் அவை தற்போது தமிழில் இல்லை.
இது தொடர்பாக கண்டனக் குரல் எழுப்பியிருந்தார் மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேன், அது தொடர்பாக அவர் அஞ்சல்துறை மேலாளருக்கும் கடிதம் எழுதியிருந்தார். உடனடியாக இந்தப் படிவங்களில் தமிழ் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டுகிறேன் என்று அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
தற்போது அவரது கடிதத்தில் இருந்த நியாயத்தைப் புரிந்துக் கொண்ட ஒன்றிய அமைச்சகமும், அஞ்சல் பொது மேலாளரும் பதில்.நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்துள்ளார்.
செல்போன்களில் தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து பெயர்களை பதிவு செய்துக் கொள்ளும் நடைமுறை தற்போது பரவலாகிவருகிறது. தனியார் நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் கூட தமிழில் செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் உரையாடவும் தொழில்நுட்ப ரீதியான வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன என்பதை சுட்டிக் காட்டியிருந்தார் எம்.பி.
இந்த காலகட்டத்தில், பிராந்திய மொழிகளுக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் அஞ்சல் துறையில் தமிழ் மொழியை படிவங்களில் இருந்து விலக்க வேண்டிய அவசியம் என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
நியாயமான கோரிக்கையை, சரியான முறையில் எடுத்துவைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அண்மை நிகழ்வு இது.
தனது கடிதத்திற்கு பதில் வந்துள்ளதைப் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி, ஹிந்தி திணிப்பு முறியடிப்பு என்று கூறும் சு.வெங்கடேசன், தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 40 க்கும் மேற்பட்ட படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும்.
ஒரு மாத காலத்துக்குள் இது முழுமையாக நடைமுறைக்கு வரும். தபால் அலுவலகம், தமிழ் அலுவலகமாக இருப்பதை உறுதிசெய்வோம்
வாடிக்கையாளர்கள் ஒரு சேவையைப் பெறும்போது, அது தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு எதுவுமே புரியாமல் பல சிக்கல்கள் ஏற்படும். இது வாடிக்கையாளர்களை பாதிக்கும்.
அதோடு, இந்தி பேசாத மாநிலங்களில் அந்ததந்த மொழிகளில் சேவைகளைத் தருவது மத்திய அரசின் கடமை. சாதாரன குடிமகனும் வழக்கு விவரங்களை தெரிந்துக் கொள்ளும் சூழல் தான் உருவாக்கப்படுவதே நீதி வழங்கல் முறை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்று நீதிபதி ரமணா கூறியிருப்பதையும், எம்.பி சுட்டிக்காட்டினார்.
எனவே வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா படிவங்களும் தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற தொழில்நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அஞ்சல்துறை மேலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார் எம்.பி. அந்த கடிதத்திற்கு பதிலளித்த அஞ்சல்துறை மேலாளர், கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ |
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR