தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 30-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.55 லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்று எழுதினர். அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் மையங்களிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி அறிந்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... எழுதாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?


10 மற்றும் 12வதுக்கான தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது


* முதலில், அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிடவும் - www.tn result.nic.in, www.dge 1.nic.in
* இப்போது முகப்புப்பக்கத்தில் காணப்படும் முடிவுகளின் பட்டியலை பார்வையிடவும்.
* அதில், 'எஸ்எஸ்எல்சி தேர்வு 2022 முடிவுகள்' அல்லது 'ஹெச்.எஸ்.சி தேர்வு 2022 முடிவுகள்" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* இப்போது, பொதுத்தேர்வுகளை சரிபார்ப்பதற்காக சாளரம் திறக்கப்படும்.
* அதில், உங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
* பின்னர், "மதிப்பெண்களைப் பெறுங்கள்" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்போது, தமிழ்நாடு போர்டு தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.


தேர்வு முடிவு வெளியடப்படும் நாள் மற்றும் நேரம்


* சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும், நண்பகல் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.


* மாணவர்கள் தேர்வு முடிவுகளை அரசு அறிவித்துள்ள www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , www.dge1.tn.gov.in , www.dge2.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


* அதேபோல் பதிவு செய்த செல்போன் எண்களுக்கு SMS வாயிலாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.


மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR