18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்பொழுது? தேர்தல் ஆணையம் தகவல்
வரும் ஏப்ரல் மாதத்தில் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.
EPS அணியுடன் OPS அணி இணைந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், முதல்வரை மாற்றவேண்டும் எனவும் கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
இதனையடுத்து கட்சி தலைமைக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்து தவறு எனவும். தமிழக அரசின் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யமால், நேரடியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது எனக் கூறி கடிதம் கொடுத்த எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியது. இதனையடுத்து அந்த 18 தொகுதிக்கும் எப்பொழுது தேர்தல் நடத்தப்படும் என கேள்விகள் எழுந்தன. ஆனால் இதுவரை 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்தநிலையில், 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்த மனு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்பொழுது போது தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிக்கு எப்பொழுது தர்தல் நடத்தப்படும் என கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்ய வரும் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் உள்ளது. அவர்களின் அவகாசம் முடிந்ததும் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.
மக்களவை தேர்தலும் வர உள்ளதால், அதனுடன் சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தலாம் எனத்தெரிகிறது.