+2 மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு துவக்கம்!!
தமிழகத்தில் இன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு துவங்கியது.
சென்னை: தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. முதல் கட்டமாக இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை செயல்முறை தேர்வு நடைபெறுகிறது.
2-வது கட்டமாக வரும் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை செயல்முறை தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 308 தேர்வு மையங்களில் செயல்முறைத் தேர்வு நடைபெறுகிறது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியுள்ளார்.