சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. இதில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நரசிம்மன், “முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசி னார்.இதற்கு தி.மு.க. உறுப் பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனே சபாநாயகர் குறுக்கிட்டு: தி.மு.க. உறுப்\பினரின் பெயரை மாண்புமிகு கருணாநிதி என்று மரியாதையுடன்தான் குறிப்பிட்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.


உடனே துரைமுருகன் எழுந்து: முதல்-அமைச்சர் பெயரை நாங்கள் குறிப்பிட்டு பேசலாமா? என்றார்.


உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று துரைமுருகனுக்கு எதிராக குரல் கொடுத்தனர். சபாநாயகர் அனைவரை யும் சமாதானப்படுத்தி உட்கார சொன்னார்.


சபாநாயகர் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை மரியாதையுடன் குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் முதல்- அமைச்சரை பெயர் சொல்லி குறிப்பிடக்கூடாது. முதல்-அமைச்சர் என்று மட்டும் தான் கூற வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறி இருக்கிறேன். அதைத்தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.


அதற்க்கு மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- சபையில் முதல்-அமைச்சர் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். அப்படி எந்த விதியும் கிடையாது. முன்னாள் முதல்- அமைச்சரை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.


ஆனால் சபாநாயகர் அதை ஏற்கவில்லை. இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சபையை விட்டு வெளியே வந்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. தலைவர் கலைஞர் 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர். 13 முறை எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார். ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. அவர் மூத்த தலைவர். எனவே அவரது பெயரை  குறிப்பிடாமல் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் சபா நாயகர் முன்னாள் முதல்-அமைச் சரை பெயர் சொல்லி அழைக்கலாம் என்கிறார். இன்றைய முதல்-அமைச் சரை சபையில் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்கிறார். முதல்- அமைச்சரின் பெயரை சொல்லக்கூடாது என்று சட்ட மன்ற விதி ஏதும் இல்லை. எனவே சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.


தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.