கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றில் தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 8-ம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பின், முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற உள்ளார். 


பேரவை எத்தனை நாள்கள் நடக்கும் என்பதுகுறித்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். 


மேலும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வர முடியாத சூழலே நிலவுகிறது.