மானிய கோரிக்கை விவாதத்திற்காக மே 10 வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 16வது சட்டசபை முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் மார்ச்28ல் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மார்ச்29, 30 ஆகிய இரண்டு நாட்களும் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அதனையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் 6ம் தேதி முதல் மே10ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6-ல் சட்டசபை கூடுகிறது. ஏப்ரல் 6-ம் தேதி நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும் என்றும் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேர நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், முதல்வர் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள் மற்றும் அமைச்சர்களின் பதில் உரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். சட்டப்பேரவையில் நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஏப்ரல் மாதம் முதல் வீட்டுக் கடன் உயர்கிறது! வாகனங்களின் விலையும் உயரும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR