Tamil Nadu Assembly News Updates: சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று பேரவையில் பேசினார். அப்போது அவர்,"ஆளுநர் மாளிகை, தன் எக்ஸ் தளத்தில் தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார். அவரின் கருத்த்தில் தடுமாற்றம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நான் பொறுப்பேற்ற பின்னர் பிரச்சார் பாரதி நிறுவனத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பேரவை நடவடிக்கைகளில் வினாக்கள் விடைகள், சட்டமுன்வடிவுகள், தனித்தீர்மானம், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.


TN Assembly: டிடி, ஆல் இந்தியா ரேடியாவுக்கு அனுமதியில்லை


இதற்காக 44 லட்சம் ரூபாய் பிரச்சார் பாரதி நிறுவனத்திற்கு பேரவை செயலகத்தால் வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஓ.பி. வேன் கிடைக்காத காரணத்தால் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என பிரச்சார் பாரதி தெரிவித்தது. அவர்களிடம் நேரடியாக அழைத்து கேட்ட போது குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓ. பி. வாகனத்தை அனுப்பி வைக்கப்பட்டதாக சொன்னார்கள். ஏற்கனவே இது போன்ற செயல்களால் அவர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், ஆளுநர் உரையாற்ற வருவதற்கு முன்னால், பேரவையின் அனுமதி இல்லாமல் டிடி தொலைக்காட்சியினர் கேமிராவை வைத்தனர். ஆல் இந்தியா ரேடியோவும் கேமிராவை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை குட்நியூஸ் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு


TN Assembly: ஆளுநரை பேசவிடாமல் தடுத்தது எதிர்க்கட்சியினர்


ஆளுநர் வரும் போது அவர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது. அனுமதி வழங்கப்படாதவர்களை எப்படி பேரவைக்குள் அனுமதிப்பது?. அவ்வாறு அனுமதி பெறாமல் உள்ளே வந்திருக்க கூடாது. ஆளுநர் எக்ஸ் பக்கத்தில் பதிவில் நெருக்கடி நிலை, அவசர நிலை என்று சொல்கிறார். முறையாக அழைத்து வந்தோம். உரையாற்ற புத்தகம் வழங்கினோம். எதிர்க்கட்சியினர் பெரிய பெரிய பதாகைகளோடு வந்தனர். ஆளுநரை பேசவிடாமல் ஒட்டுமொத்தமாக தடுத்தது எதிர்க்கட்சியினர்.


TN Assembly: அதிமுகவை வெளியேற்றியது ஏன்?


ஆளுநர் இருக்கும்போது இந்த பதாகைகளை கொண்டு வரக்கூடாது என கூறினேன். ஆளுநர் இரண்டு மணித்துளியில் வெளியேறி விட்டார். அவை தொடர வேண்டும் என்பதற்காகவே அதிமுகவினரை வெளியேற்றினோம். ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்ததால்தான் அதிமுகவினரை வெளியேற்றினோம். ஆளுநர் வெளியே சென்ற பின்னரும், முதன்மை செயலாளரை அழைத்து ஆளுநரை அழைத்து வர அறிவுறுத்தினேன்" என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.


TN Assembly: கொந்தளித்த துரைமுருகன்


சபாநாயகர் அப்பாவுவின் விளக்கத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அவை முன்னவர் துரைமுருகன், 'இது என்ன அவையா?. இந்த அவையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை?. அதிமுகவினர் அமர்ந்து பேசுவதென்றால் பேசுங்கள். இல்லையென்றால், வெளியே போங்க. அவையின் மரபே கெட்டுப்போச்சு" என்றார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் - வெளியான முக்கிய தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ