சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பகுதியளவு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சி அதிக இடங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. அதேபோல தெலுங்கான மாநிலத்தில் தெலுங்கான ராஷ்டிரிய சமித்தி கட்சி பெரும்பான்மையை நோக்கி முன்னேறுகிறது.


இந்நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சில தொகுதிகள் மட்டுமே வித்தியாசம். நாங்கள் வெற்றி பெறுவோம்.


இதைவைத்து மோடி அலை ஓய்ந்துவிட்டது எனக் கூறுவது ஏற்க்க முடியாது. மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது, மோடி அலைக்கு நிகரான பெரிய தலை எந்தக்கட்சியிலும் கிடையாது.


நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்கவும் மாட்டோம், தோல்வியடைந்தாலும் துவள மாட்டோம். எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி" எனக்கூறினார்.