திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் ஸ்டாலினை புகழ்ந்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பாஜகவை விடுத்து திமுகவில் இணைந்தார்.


புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை செயலாளர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவரை புகழ்ந்து பேசிய அரசக்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில பாஜக மத்திய தலைமைக்கு கடிதம் அனுப்பியது. தலைமை என்ன சொன்னாலும் கட்டுப்படுவேன் என கூறிய அரசக்குமார் திடீரென இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பேசிய அரசக்குமார் ”20 ஆண்டுகளுக்கும் முன்னர் நான் நடந்து வளர்ந்த இந்த அறிவாலயத்திலே, என் சொந்தங்களோடு மீண்டும் இணைந்துள்ளேன். தமிழ் மக்களின் நிகரற்ற தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பாஜகவிலிருந்து என்னை விரட்ட வேண்டும் என பலர் பல திட்டங்களை தீட்டினார்கள். தற்போது நானே வெளியேறிவிட்டது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என கூறியுள்ளார்.