10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர்.


பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள்.


சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர் இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள்.


தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:-


> www.tnresults.nic.in


> www.dge1.tn.nic.in


> www.dge2.tn.nic.in


ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.


மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பட்டது.