Old Pension Scheme சூப்பர் செய்தி: பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்குமா அரசு?
Tamil Nadu Budget 2024 Old Pension Scheme: இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படயுள்ள நிலையில், தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu State Assembly Budget Session 2024 2025 Old Pension Scheme: தமிழக பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் செல்லையா கடந்த சில மாதங்களாகவே வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது இது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் :
2024 - 25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவர் பேரவையில் வந்து அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக வாசித்தார். இது தொடர்பான சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 ஆம் தேதி அதாவது இன்று தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2024: புதிய அறிவிப்புகள் என்ன? முக்கிய அம்சங்கள் என்னென்ன?
2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் :
2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (Tamil Nadu Budget 2024-25) தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையில் தாக்கல் (TN Assemblyசெய்யப்0 போகிறார். இதனையொட்டி “தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதேசமயம் நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
பழைய ஓய்வூதியம் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா :
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியம் திட்டம் (OPS) குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல், 1 முதல், அப்போதைய அதிமுக அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை (New Pension Scheme) அமல்படுத்தியது. 2004ல் மத்திய பாஜக அரசும், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இத்திட்டத்தை ரத்து செய்வதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா கொடுந்தொற்றால் நிதிநிலை சரியில்லாமல் போனதால் தாமதமானது. தற்போது நிதி நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது.
ராஜஸ்தான், உத்தரகண்ட், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே, மேற்கு வங்கம், கோவா மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் தொடர்கிறது. அதேபோல், தமிழகத்திலும் நடப்பாண்டு பட்ஜெட்டில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ பட்ஜெட்டில் நிறைவேற்றலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையின் மீது அரசு கவனம் செலுத்தலாம்
மேலும் படிக்க | Tn budget: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ