Tamil Nadu Cabinet Minister List: தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் நாசர் பதவியிலிருந்து இருந்து விடுவிக்கப்பட்டு டி.ஆர்.பி ராஜாவிற்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 11 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளார் எனவும் அறிவிப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகன் தான் தமிழக அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


மேலும் படிக்க: பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு: வானதி சீனிவாசன் கோரிக்கை



டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி:
இரண்டு ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் கேபினட் போர்ட்ஃபோலியோ மாற்றம் ஆகும். திமுக கட்சியின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகனும், மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராக உயர்வு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில், மன்னார்குடி எம்எல்ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். 


ராஜாவின் கீழ், திமுக ஐடி பிரிவு ஒரு பெரிய உருவாக்கமாக விரிவடைந்தது. இதில் பிஜேபி தலைமையிலான செயல்பாடுகளுக்கு எதிராக அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. சில சமயங்களில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட மூத்த மத்திய அமைச்சர்களின் வருகையின் போது சமூக வலைத்தளத்தில் பாஜகவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது.


ராஜாவின் அரசியல் வாழ்க்கை சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. வலதுசாரி சித்தாந்தவாதியான வீர் சாவர்க்கரின் கேலிச்சித்திரத்தை இந்துக் கடவுளைத் தாக்குவது போல் ட்வீட் செய்திருந்தார். இருப்பினும், அந்த இடுகை பின்னர் நீக்கப்பட்டது. 


மேலும் படிக்க: ’எதிரகளே இல்லை’ ஜெயலலிதா பாணியில் விளாசிய துரைமுருகன்: ஆளுநர் மீது ஆவேசம்


யார் இந்த டி. ஆர். பி. ராஜா?
டி. ஆர். பி. ராஜா என அழைக்கப்படும் தளிகோட்டை இராசுதேவர் பாலு ராஜா என்பவர் திமுகவில் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி ஆவார் இவர் 2011, 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மன்னாா்குடி தொகுதியில் போட்டியிட்டு தொடந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார், இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் உள்ளார். தற்போது இவர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏ. ஆக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பால்வளத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.


டி. ஆர். பி. ராஜா கல்வி விவரங்கள்:
இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு தத்துவத்துறையில் வழிகாட்டுதல் உளவியலும் மேலாண்மையும் என்ற தலைப்பை எடுத்து வெற்றிகரமாக முடித்தார்.


மேலும் படிக்க: ஆளுநர் வேலையைத் தவிர மற்றதை எல்லாம் RN.ரவி செய்கிறார்: ராஜகண்ணப்பன்


டி. ஆர். பி. ராஜாவின் அரசியல் வாழ்க்கை:
ராஜா மன்னார்குடியில் இருந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுகவின் என்ஆர்ஐ பிரிவின் முதல் செயலாளராகவும், அதன் முன்னாள் செயலாளரும், தமிழக நிதியமைச்சருமான பி.டி.ஆர்., அரசு பணிச்சுமை காரணமாக பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் 2வது செயலாளராக நியமிக்கப்பட்டார். 


சட்டமன்ற தேர்தலில் மூன்று முறை வெற்றி:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.


- 2011 சட்டமன்ற தேர்தல் மன்னார்குடி தொகுதியில் வெற்றி
- 2016 சட்டமன்ற தேர்தல் மன்னார்குடி தொகுதியில் வெற்றி
- 2021 சட்டமன்ற தேர்தல் மன்னார்குடி தொகுதியில் வெற்றி


மேலும் படிக்க: ஓ பன்னீர்செல்வத்தை வெக்கங் கெட்டவர்கள் என கூறிய அதிமுக கேபி முனுசாமி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ