சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் இழப்பீடு
சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
சென்னை: சிவகாசியில் இரு தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பட்டாசு ஆலை தீவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினார்கள். இந்த விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகாசி பட்டாசு உற்பத்தி செய்வதற்குக் பிரபலமான நகரம். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், சிவகாசி அருகே காளையர்குறிச்சி பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதியன்று ஏற்பட்ட பட்டாசு அலை வெடிவிபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அடுத்த காளையர்குறிச்சி பகுதியில், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை (FireWorks Factory) இயங்கி வருகிறது. இந்த ஆலையில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை பட்டாசு உற்பத்தியின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read | பட்டாசு மீதான தடை.. கேள்விக்குறியாகும் சிவகாசி பட்டாசு ஆலைகளின் நிலை..!!!
இந்த விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palaniswami), உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிவாரணம் (Compensation) அறிவித்திருக்கிறார். காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் (Tamil Nadu Chief Minister) அறிவித்திருக்கிறார்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
Also Read | எம்பெருமான் சிவனை பசுக்கள் வணங்கிய தலங்கள் எவை தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR