பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பத்திரத்தை பிரதமரிடம் அளித்தார். இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது தமிழக அரசியலில் அடுத்த என்ன மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் ஒரு குழப்பமான சூழ்நிலையில் உள்ளது. எனவே அது பற்றிய விவாதங்களை முன்னெடுத்து வைப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி பிரச்சனைகள், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பில் இன்னும் வழங்கப்படாமல் உள்ள பல ஆயிரக்கணக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 


இது தவிர, அடுத்த மாதம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அதற்கு அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு எவ்வளவு இருக்கிறது என்பது உள்ளிட்ட விவாதங்களும் இந்த சந்திப்பில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.