ஒரு நாளைக்கு 20000 ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்!
தமிழகத்துக்கு கூடுதலாக 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தற்போது தமிழ் நாட்டிற்கு ஒரு நாளைக்கு 7000 ரெம்டெசிவிர் குப்பிகள் மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. இது தேவைக்கு போதுமானது அல்ல. தமிழ் நாட்டிற்கு ஒரு நாளைக்கு 20,000 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K. Stalin), தொலைபேசி மூலம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 20,000 ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்துகள்வழங்கினால் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வரின் கோரிக்கையை அடுத்து, ரெம்டெசிவிர் மருந்துகள் அதிகமாக ஒதுக்கீடு செய்வது பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) உறுதி அளித்துள்ளார்.
ALSO READ | Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'.. மத்திய அரசின் 'ரியாக்ஷன்'
கொரொனா வைரஸ் (Coronavirus) தொற்றால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப் பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து, முதலில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR