பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு!
பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்கக்கோரி தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார்!
பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்கக்கோரி தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார்!
புது டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்கக்கோரி மனு அளித்துள்ளார். இச்சந்திப்பின் போது அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இன்று காலை 11.10 மணி அளவில் நடைப்பெற்ற இச்சந்திப்பில், பேரிடர் நிவாரண நிதி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைத்தல் தொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அவர்கள்...
"மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும். சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கைப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு.. காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான் என தெரிவித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.