சென்னை: தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் மூத்த அதிமுக நிர்வாகியுமான பி.ஹெச். பாண்டியன் (PH Pandian) உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  பி. ஹெச். பாண்டியன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என்று கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 



பி.ஹெச். பாண்டியன் மூன்று முறை அதாவது 1977 முதல் 1989 வரை சட்ட சபை உறுப்பினராக இருந்தார். அதேபோல 1980 முதல் 1985 வரை துணைத் தலைவராகப் பதவி வகித்தவர். அதன் பிறகு முன்னால் முதல்வர் எம்ஜிஆர் மறைவு வரை சபாநாயகராக பதவி வகித்தார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அருகே உள்ள கங்கெனாபுரம் ஆகும்.


சில நாட்களுக்கு முன் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது