பொதுமக்கள் விதிகளை கடை பிடிக்க வேண்டும்; சுர்ஜித் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்
மறைந்த சுர்ஜித் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விதிகளை கடை பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்றும், மேலும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
சுமார் 82 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, குழந்தையின் உடற்கூராய்வுக்குப்பின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.