மருத்துவத் துறைக்கு பெரிய உந்துதல்: பல்வேறு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் EPS
சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (KMC), அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் ரூ .368.2 கோடி செலவிலான கட்டிடங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை: மருத்துவ உள்கட்டமைப்புக்கு ஒரு பெரிய உந்துதலாக, தமிழக முதல்வர் கே.பழனிசாமி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (KMC), அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் ரூ .368.2 கோடி செலவிலான கட்டிடங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi K Palaniswami) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வு ஒரு வீடியோ கான்ஃபிரன்ஸ் மாநாடு மூலம் நடைபெற்றது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அரசு கல்லூரிகளுக்கு நரம்பியல் பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி வெளிநோயாளிகள் பிரிவுகள், பொது மற்றும் தீக்காயங்களுக்கான வார்டுகள், பல நோய்களுக்கான அறுவை சிகிச்சை மையங்கள் போன்ற பல பிரிவுகளுக்கான வசதிகள் கிடைக்கும்.
ALSO READ: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: வரவிருக்கிறது மிகப் பெரிய good news!!
திருச்செந்தூர் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ரூ .10.92 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், கருணூர், தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் (Tamil Nadu) பல்வேறு பகுதிகளில் மின் துணை நிலையங்களையும், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஏழு மேல்நிலைப் பள்ளிகளுக்கான புதிய கட்டிடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் அர்ப்பணிக்கப்பட்டன. இது தவிர கே சகாயபாரதிக்கு (கேரம் சாம்பியன்) ரூ .40 லட்சம் காசோலையும், சதுரங்க வீரர் டி குகேஷுக்கு ரூ .5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களையும் தமிழக முதல்வர் கௌரவித்தார் என அரசாங்க செய்திக்குறிப்பு தெரிவித்தது.
ALSO READ: ராமவரம் தோட்டத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து அதிரடியாக களம் இறங்கும் சசிகலா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR