மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: இன்று தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியது,
கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், சென்னை வியாசர்பாடி, திருவண்ணாமலை, நாமக்கல் போன்ற பகுதிகளில் பணியில் ஈடுபட்டு இருந்த போது ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.