COVID-19 Update: இன்று 1,587 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 18 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,180 ஆக உள்ளது.
சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,587 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,27,365 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 179 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,180 ஆக உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 -ஐ எட்டியுள்ளது.
ALSO READ | Covid-19 Alert: மூன்றாவது அலை தொடங்கியதா? 2 நாட்களில் இரட்டிப்பானது தொற்று பரவல்
தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,594 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,76,112 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மொத்தமாக 1,60,303 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,544 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 877 ஆண்களும் மற்றும் 667 பெண்களும் அடங்குவார்கள்.
இன்றைய நிலவரம்:
• இன்றைய பாதிப்பு - 1,587
• இன்றைய மரணங்கள் - 18
• மொத்த பாதிப்பு - 26,27,365
• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,594
• இன்றைய சோதனைகள் - 1,60,303
ALSO READ | Robatic usage in Corona Vaccine: கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க தானியங்கி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR