சென்னை:  தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் 1,964 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றை விட அதிகம் என்பது கவலையளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று 243 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் உள்பட 8 மாவட்டங்களில் தினசரி புதிய தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.


சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொது வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு-188ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.



தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 243 பேருக்கும், அதனையடுத்து கோயம்பத்தூரில் 229 பேருக்கும், புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகமாக இருக்கிறது.  


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
சென்னை - 243
கோயம்புத்தூர்- 229
ஈரோடு - 167
செங்கல்பட்டு - 140
தஞ்சாவூர் - 98



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 22
செங்கல்பட்டு 140
சென்னை 243
கோவை 229
கடலூர் 75
தர்மபுரி 25
திண்டுக்கல் 11
ஈரோடு 167
கள்ளக்குறிச்சி 31
காஞ்சிபுரம் 39
கன்னியாகுமரி 30
கரூர் 23
கிருஷ்ணகிரி 22
மதுரை 17
மயிலாடுதுறை 23
நாகப்பட்டினம் 40
நாமக்கல் 37
நீலகிரி 43
பெரம்பலூர் 8
புதுக்கோட்டை 39
ராமநாதபுரம் 6
ராணிப்பேட்டை 20
சேலம் 85
சிவகங்கை 20
தென்காசி 7
தஞ்சாவூர் 77
தேனி 13
திருப்பத்தூர் 12
திருவள்ளூர் 98
திருவண்ணாமலை 48
திருவாரூர் 40
தூத்துக்குடி 18
திருநெல்வேலி 16
திருப்பூர் 73
திருச்சி 78
வேலூர் 45
விழுப்புரம் 34
விருதுநகர் 10


Also Read | Covid Updates ஆகஸ்ட் 11: தமிழகத்தில் இன்று 1,964  பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR