சென்னை: பிப்ரவரி 19 அன்று மாநில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்திய விதம் வெட்கக்கேடானது. வன்முறையுடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தை திமுக அரசு மேற்கொண்டது. குறிப்பிட்ட சில வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஏஎன்ஐ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பேசிய அவர், வாக்களிக்கும் பகுதிக்கு வெளியே நின்ற திமுகவினருக்கு பயந்து மக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை. வாக்கு சதவீதம் 14% குறைந்துள்ளது. எம்எல்ஏ முருகனின் வாக்கை கூட வேறு யாரோ ஒருவர் செலுத்த வந்தார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகே வாக்களிக்க அனுமதித்தனர் எனவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க: 2000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி


பத்தாண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் வேளையில், திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுலால்து. அதே நேரத்தில் பாஜக-வால் வெல்வது கடினம் எனக் கூறப்பட்ட நிலையில், கணிசமாக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது. 


9 ஜூலை 2021 அன்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR