அத்தியாவசிய சேவை ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் அக்டோபர் 5 முதல் நகரின் புறநகர் பாதைகளில் இயங்கும் அதன் "தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில்" ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே தற்போது தனது சொந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சேவைகள் பொது மக்களுக்கானது அல்ல. "தமிழக அரசின் (Tamil Nadu Government) வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, அக்டோபர் 5 முதல் தெற்கு ரயில்வேயின் சென்னை டிவிஷன் மூலம் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களாக இயங்கும் குறைந்த எண்ணிக்கையிலான புறநகர் ரயில்களில் பயணிக்க மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய சேவை ஊழியர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று ஒரு அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் சேவைகளின் விவரங்கள் நிலையங்களில் காண்பிக்கப்படும். மாநில அரசாங்கத்தின் ஒரு நோடல் அதிகாரி, தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பயணிக்க அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு குறிப்பிட்ட பயண அனுமதியை வழங்குவார் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


"குறிப்பிட்ட பயண அனுமதிப்பத்திரத்தில் பெயர், பதவி மற்றும் துறை / அலுவலகம் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த அனுமதிப்பத்திரத்தின் அசலை, நபரின் அலுவலகத்தால் வழங்கப்பட்ட நபரின் புகைப்பட அடையாள அட்டையுடன் வழங்கினால் மட்டுமே ரயில்வே அதை ஏற்றுக்கொள்ளும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: Chennai-யில் பதுங்கியிருந்த கொரோனா புலி மீண்டும் பாய்கிறதா: 24 மணி நேரத்தில் 1000 பேர் பாதிப்பு!!


இந்த நபர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் பொது மக்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்க்ரீனிங் போன்ற வழக்கமான சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படும். கண்டிப்பாக அனைவரும் முகக்கவசங்களை அணிந்து தனி மனித இடைவெளியை (Social Distancing) பின்பற்ற வேண்டும்.


முன்னதாக, லாக்டௌன் கட்டுப்பாடுகளை அக்டோபர் 31 வரை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை, மாநிலத்தில் புறநகர் ரயில்களின் இயக்கம் இப்போதுள்ளது போல் நிறுத்தப்பட்டே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த லாக்டௌனில் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற அரசாங்கம் அனுமதித்துள்ளது. எனினும் படப்பிடிப்பு நடக்கும் செட்டில் 100 பேர் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.


தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இரவு 10 மணி வரை எடுத்துச் செல்லும் சேவை அனுமதிக்கப்படுகிறது.


ALSO READ: October 31 வரை லாக்டௌனை நீட்டித்தது தமிழக அரசு: புதிய தளர்வுகள் அறிவிப்பு!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR