செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம், பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தருமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது. இதனால் கடந்த மே 1 ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி (Corona Vaccine) பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு (Tamil Nadu Government) தம்மிடமுள்ள கட்டமைப்பை கொண்டு ஆக்ஸிஜன் போன்ற போன்றவைகளை கையிருப்பில் வைத்துள்ளன.
ALSO READ | கொரோனா தடுப்பூசி வீணடிப்பு பட்டியலில் தமிழகம் 3ம் இடம்
இதனால், தடுப்பூசி தயாரிப்பில் சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் செங்கல்பட்டில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையம் தற்போது ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்திற்கு ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்திடம் தடுப்பூசி மையத்தை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை நேற்று முன்தினம் முதல் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR