Diwali bonus, Tamil Nadu Government Full Details : தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்றும், கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த போன்ஸ், மற்றவர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு ஒரு டிரில்லியன் என்ற பொருளாதார இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதற்கு பங்களிப்பு செய்யும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போனஸ் அறிவிப்பு என்றும் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | RBI MPC: குட் நியுஸ், EMI அதிகரிக்காது... ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை!!


முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உற்பத்தித் துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அரசின் தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இணைந்து, தமிழகம் இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக மாறி வருவதுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்” பொருளாதாரத்தை (one trillion economy) நோக்கி பயணிக்கிறது.  


அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்


தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும், உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படவுள்ளது.  


யாருக்கு எவ்வளவு போனஸ் தொகை


இதேபோல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8 புள்ளி 3 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும். இதனால், குறைந்தபட்சமாக 8,400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் போனஸாக வழங்கப்படும். 2,75,670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்பட உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான போனஸ் குறித்து தனியே அறிவிக்கப்படும்” என இந்த செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... மாதம் ரூ.10,000 EPS ஓய்வூதியம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ