சிதம்பரத்தில் பக்தர்களை கனகசபை மீது ஏறி வழிபடுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. இதனால் பக்தர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு, அனைவரும் வழிபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபாடு நடத்தினர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் கோயிலை சுமார் 200 தீட்சிதர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் முறையாக கோயில் கணக்குகளை கொடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். காணிக்கை குறித்த எந்த தகவலும் இல்லை எனவும் அவர் கூறியதுடன் முறைப்படி இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயிலை கொண்டு வருவதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்


இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின்படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் யாருக்கு சொந்தம் என நீதிமன்றங்களில் வந்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டக் கருத்துரையை மதுரையில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. சட்டக் கருத்துரையை வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது "சிதம்பரம் நடராஜர் கோவில் மக்களுக்கு சொந்தமான கோவில். கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் மக்களுக்கான கோவில் என உறுதியாகி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நிர்வாகம் செய்யலாம். 


சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்குகளில் மக்களுக்கே சொந்தம் என தீர்ப்பு வந்துள்ளது. 1890, 1936, 1951, 1954, 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மக்களுக்கே சொந்தம் என கூறிப்பிடப்பட்டு உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின் படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். சிற்றம்பல மேடைக்கு செல்வதை தீட்சிதர்கள் தடுக்கிறார்கள். சிதம்பரம் கோவிலை தமிழக தொல்லியத்துறை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும். மத சடங்குகளில் தமிழக அரசு தலையிடவில்லை. சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தம் என எந்தவொரு ஆதாரமும் இல்லை. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் அறங்காவலர்கள்போல செயல்பட்டு வருகிறார்கள். கோவில் வழக்குகளில் வழிபடும் உரிமை நிலைநாட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது" என விளக்கமளித்தார்.


மேலும் படிக்க | ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க முதல்வர் ஒன்றும் பொம்மை இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ