பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கப்போகும் சர்பிரைஸ்..!
TN Govt Pongal Gift | தீபாவளி பண்டிகையைபோல் பொங்கல் பண்டிகையின்போதும் கூட்டுறவுத்துறை சார்பில் சிறப்பு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Government Special Pongal Gift for Ration Card Holders | தீபாவளி பண்டிகை நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தாக பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக அப்போது தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு இப்போதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இம்முறை பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய், அத்துடன் கருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என பெண்கள் எதிர்பார்த்துள்ளனர். ஏனென்றால் தமிழ்நாடு அரசு எப்போதும் பொங்கல் சிறப்பு பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும். இந்த நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை சார்பில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தீபாவளி பண்டிகையின்போது கூட்டுறவுத்துறை நடத்திய சிறப்பு விற்பனைக்கு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் அவர், பொங்கல் பண்டிகையின்போதும் இதேபோன்று சிறப்பு விற்பனை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | பெற்றோர்களே! மாணவர்களே உங்களுக்கு குட்நியூஸ் - அரசின் சூப்பர் அறிவிப்பு
இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " பண்டிகைகள் என்பது தமிழர்களுடைய வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாகும். அத்தகைய பண்டிகைகளை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் படி கூட்டுறவுத்துறையின் மூலம் 31.10.2024 அன்று நடைபெற்ற தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாக விற்பனை மற்றும் "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆகியவை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கூட்றவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை 28.10.2024 முதல் நடைபெற்றது.
இதில், பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய "அதிரசம்-முறுக்கு காம்போ" என்ற விற்பனை தொகுப்பும் குறைந்த விலையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 20,000 தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது" தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விற்பனையை ஏற்பாடு செய்த அலுவலர்களுக்கும், சிறப்பாக விற்பனை மேற்கொண்ட விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அமைச்சர் பெரியகருப்பன், இதே போல, வரும் பொங்கல் திருநாளிலும் இது போன்ற சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்திடவும், சிறப்பாக மேற்கொள்ளவும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ